சிரிக்க வைக்க பல வழிகள், ஆனால் நகைச்சுவையை விட சிறந்த வழி
வேறு எதுவாக இருக்கும்.
டெய்லி பியூட்டி பார்லர்லேந்து வர்ற பொண்ண சைட் அடிச்சுட்டு இருந்தியே
என்னாச்சு?
அத ஏன் கேக்கற ஒரு நாள் கிட்டப் போய் பாக்கறேன்... அது எங்க பாட்டிடா.
***
டாக்டர் : நர்ஸ் ஆபரேஷனுக்கு எல்லாம் தயாரா?
நர்ஸ் : எல்லாமே ரெடி சார், பேஷண்ட் யாராவது இருந்தா ஆரம்பிச்சுடலாம்.
***
மேனேஜர் : ஆபிஸ்ல தூங்கினா இப்பல்லாம் டிஸ்மிஸ் செய்யலாம்னு சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பு சொல்லியிருக்கு தெரியுமா?
கிளார்க் : அதச் சொல்றதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் இல்லை, 10 நிமிஷத்துக்கு
முன்னாடியே உங்கள டிஸ்மிஸ் செஞ்சு ஆர்டர் வந்தாச்சு.
***
ட்ரிபிள்ஸ் போனவங்களத்தான பிடிச்சிருக்காரு அதுக்கு ஏன் காச்
மூச்சுன்னு கத்தறீங்க...
யோவ்... அவங்க ஆட்டோல போனாங்கய்யா.
***
டாக்டர் என்னோட இ.சி.ஜிய வச்சுகிட்டு என்ன பண்றீங்க?
சரியான நேரத்துல சொன்னீங்க, இது என்னடான்னு குழம்பிப் போயிட்டேன்.
***
பயணி 1 : நானும் பாத்துக்கிட்டு வரேன் திருச்சிலேர்ந்து மெட்ராஸ்
வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலயும் இறங்கி டிக்கெட்
வாங்கறீங்க?
பயணி 2 : டாக்டர் என்னை நெடுந்தூரப் பயணம் செய்யக் கூடாதுன்னு
சொல்லியிருக்கார்.
?!?!
***
அதுக்குள்ளேயே அந்த நடிகருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கறாங்கன்னா என்ன
அர்த்தம்?
இதுக்கு மேல நடிக்காதன்னு அர்த்தம்.
***
மாசக் கடைசில குடும்பச் செலவுக்கே கஷட் மாயிடுது, நீ என்னடான்னா
பிச்சை கேட்டு வந்துட்ட!
எனக்கும் அதான் சாமி பிரச்சினை அதனாலதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு
மீண்டும் இந்தத் தொழிலுக்கே வந்துட்டேன்.
0 comments:
Post a Comment